மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுவது எப்போது? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!

 
money

மகளிர் உதவித்தொகை மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்று  அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

periyasamy

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்  உணவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். தேனி அல்லி நகரத்தில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஐ.பெரியசாமி,  "இன்னும் ஓராண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பிறகு நகராட்சி , பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும்.  கூட்டுறவு துறை,  நெடுஞ்சாலைத் துறைகளில் 5 ஆயிரம் பணியிடங்கள் ஆறு மாதங்களில் எந்தவித இடையூறுமின்றி தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படும். 

mk Stalin biopic

சத்துணவு பணியாளர் பணியிடங்களும் நிரப்பப்படும் . அனைவருக்கும் வேலைவாய்ப்பினை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.  தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் படி,  கட்டாயம் நிதி உதவி வழங்கப்படும்.  அதிமுக  தலைமை இல்லாத கட்சி ;அந்த கட்சி இனி காணாமல் போய்விடும். 20 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆட்சி அமைக்கும்" என்றார்.