கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!

 
rain

கேரளாவில்  தென்மேற்கு பருவ மழையின் காரணமாக 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

rain
கேரளாவில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.  இதன் காரணமாக கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  தொடக்கத்தில் மிதமான மழை பெய்த நிலையில் தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

rain
இந்த சூழலில் கேரளாவில் வருகிற ஐந்தாம் தேதி வரை பலத்த கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  நாளை திருவனந்தபுரம் தவிர மாநிலத்தின் 13 மாவட்டங்களிலும் நாளை மறுநாள் முதல் ஐந்தாம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அத்துடன் எர்ணாகுளம் ,கோழிக்கோடு ,வயநாடு உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.