பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைது

 
arrest arrest

சென்னையில் பட்டா கத்தியால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய பரட்டை தலை ஹானஸ்ட்ராஜ் என்ற இளைஞரை போலீசார் சுற்று வளைத்து கைது செய்தனர். 

சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை வைத்து சென்னை காவல்துறை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் வீடியோவை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் பரட்டை தலையுடன், பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய  திருமங்கலத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி ஹானஸ்ட்ராஜ் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து  பரட்டை தலை ஹானஸ்ட்ராஜை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

pattakathi

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய குற்றத்திற்காக போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பரட்டை தலை ஹானஸ்ட்ராஜ், போலீசார் தன்னை பிடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது பறட்டை தலைமுடியை வெட்டிவிட்டு கிளீனாக சுற்றி  திரிந்துள்ளார். தலைமுடியை வெட்டிவிட்டு தலைமறைவாக அவரது வீடு இருக்கும் பகுதியில் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவரை தீவிரமாக தேடி வந்த போலீசார் ஏற்கனவே அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து முடியை வெட்டிவிட்டு சுற்றித்திரிந்த ஹானஸ்ட்ராஜை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.