#BREAKING அண்ணாமலைக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு

 
Annamalai Annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

Annamalai


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள்,  மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறை கூறியுள்ளது இதன் காரணமாக  அண்ணாமலைக்கு மத்திய அரசின் கூடுதல் பாதுகாப்பு தேவை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

annamalai

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 28 சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். இதுவரை ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நிலையில் அண்ணாமலைக்கு இனி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது