சாதி பெயரை சொல்லி 17 வயது சிறுவனை கட்டி வைத்து இரவு முழுவதும் தாக்குதல்!

 
ழ்ச் ழ்ச்

17 வயது சிறுவனை சாதி பெயரை சொல்லி இரவு முழுவதும் கட்டி வைத்து அடித்த கொடூரம் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரங்கேறியுள்ளது.

தென்கரைக்கோட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணனிடம், குறுகிய காலமே வேலை பார்த்துள்ளார். பின்னர் வேலையை விட்டு நின்ற சிறுவன், தனது மாமாவிடம் வேலைக்கு சேர்ந்ததால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் ஆத்திரமடைந்தார். இதுதொடர்பான முன்விரோதத்தில், சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, சாதி பெயரை கூறி கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக A.பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.