சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

 
dead

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் அய்யனார்-சோனியா தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் ரக்சன் என்ற மகன் இருந்தான். ரக்சன் கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது பெற்றோர் ரக்சனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அந்த சிறுவனை பரிசோதித்து பார்த்ததில் அந்த சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிறுவன் கடந்த 06ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்குள்ள தீவிர சிகிச்சை பரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், நேற்று இரவு அந்த சிறுவன் சிகிச்சை பலைன்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன உயிரிழந்த சம்பவம் மதுரவாயல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயிலின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருவதகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே சுகாதார சீர்கேட்டை போக்கி நடவடிக்கை எடுக்கும் வரை சிறுவனின் உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.