விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாத்தம்பூண்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் ஏழு வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வந்தவாசி அடுத்த சாத்தும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஏழுமலை மற்றும் அவரது மனைவி மற்றும் 7 வயது விஷ்வா என்ற சிறுவன் ஆகியோர் சந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது 7 வயது விஷ்வா என்ற சிறுவன் விவசாய கிணற்றின் அருகே சென்றபோது எதிர்பார்ப்பு விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் ஏழு வயது சிறுவன் விஷ்வா தண்ணீரில் மூழ்கி உள்ளார். அருகில் இருந்த பொதுமக்கள் கிணற்றில் இறங்கி தேடினர். சிறுவன் உடல் அதிக ஆழத்தில் சென்றதால் பொதுமக்கள் தெள்ளார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். பின்னர் விவசாய கிணறு அதிக ஆழம் மற்றும் அதிக அளவில் தண்ணீர் இருந்தால் உடலை தேடும் பணியில் சிக்கல் இருந்தது. பின்னர் போலீசார், தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உதவியுடன் அருகில் இருந்து 3 மின் மோட்டார்கள் கொண்டு வந்து விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, சிறுவனின் உடலை சடலமாக மீட்டனர்.


