ஆற்றில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தை
பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே பிறந்து ஒரிரு நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் அரசலாற்றில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமபகுதியில் காவிரி ஆற்றிலிருந்து அரசலாறு பிரிவு பகுதி அமைந்துள்ளது. இன்று அரசலாற்றின் பழைய கதவனை அருகில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் பொழுதுபோக்கிற்காக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அரசலாற்றில் குழந்தை ஒன்று மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
கபிஸ்தலம் காவல் நிலையத்தார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது,
பிறந்து ஓரிரு நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம்ஆற்றில் மிதந்தகரை ஒதுங்கியது. தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் ஆண் குழந்தையின் சடலத்தின் தாய் யார், ஆற்றில் போட்டுவிட்டு சென்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் , அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


