ஒன்றரை வயது குழந்தையை கொன்று சாக்கடையில் வீசிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற தாய்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்து சாக்கடை கால் வாயில் வீசிவிட்டு கள்ளக்காதலனுடன் வெப்படையில் தனியார் நூற்பாலையில் தங்கி இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சக்கரத்தாப்பூர் இன் சுட்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரதி. கோத்ரா இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கக்கிரிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. ரதி கோத்ரா சில வருடங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து தனது திருமணத்திற்காக மீண்டும் சொந்த ஊருக்கே சென்றார் திருமணத்திற்கு பிறகு தனது கணவனுடன் சொந்த ஊரிலேயே தங்கி கூலி தொழில் செய்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் உடன் ரதி கோத்திராவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரதி கோத்ரா தனது கணவனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் மீண்டும் இருவரும் தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படைக்கு வர திட்டமிட்டனர். இதற்கு இடையூறாக இருந்த தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த ரதி கோத்ரா அங்கிருந்து ஒரு சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு தனது கள்ளக்காதலுடன் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படைக்கு வந்து தங்கி உள்ளனர். குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்தை ஜார்க்கண்ட் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்ட பொழுது, ரதிகோத்திர குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை தனியார் நூற்பாலையில் உள்ளதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜார்க்கண்ட் மாநில போலீசார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வெப்படை காவல்துறையை நாடி உள்ளனர். இதனை அடுத்து வெப்படை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்து தங்கி பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து வெப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ரதிகோத்ராவை கைது செய்து ஜார்கண்ட் மாநில போலிசாருடன் அனுப்பி வைத்தனர்.


