லாரி மீது பைக் மோதி த.வெ.க. மாநாட்டுக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு

 
லாரி மீது பைக் மோதி  த.வெ.க. மாநாட்டுக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு லாரி மீது பைக் மோதி  த.வெ.க. மாநாட்டுக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு

சென்னை அண்ணா சாலையில் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் இருந்த இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சென்னை பிராட்வே மினர்வா தியேட்டர் சாலையோரத்தில் வசிப்பவர் தேவி. இவரது மகன் வசந்த் (வயது 19). நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இவர் இன்று காலை தனது நண்பர் ரியாஸ்(17) உடன் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். தேனாம்பேட்டை டிஎம்எஸ் சிக்னல் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மணல் லாரி மோதியதில் வசந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த ரியாஸ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த விபத்து தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.