தனியார் பொழுதுபோக்கு மையத்தில் பராமரிப்பாளரை மிதித்து கொன்ற ஒட்டகம்

 
ஒட்டகம்

புதுச்சேரி அருகே தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ஒட்டக பராமரிப்பாளரை ஒட்டகம் மிதித்து கொன்றது.

மத்திய பிரதேசம் மாநிலம் பர்வா ணியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 67).‌ புதுவை தவளக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் கடற்கரையில் உள்ள தனியார் விடுதியில் ஒட்டகம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். ஞாயிறன்று அவர் ஒட்டகத்துக்கு தீவனம் போட்டுகொண்டிருந்தார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக ஒட்டகம் மிதித்து கடித்துள்ளது.  இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேசத் தில் உள்ள அவரது உறவினர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுவரை வரவில்லை. அவர்கள் வந்த பிறகே ரமேசின் உடல் பிரேத பரிசோதனை செய் யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.


இந்த நிலையில் பராமரிப்பாளரை கொன்ற ஒட்டகத்தை நிர்வாகத்தினர் தனியாக கட்டி வைத்துள்ளனர். கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஒட்டகத்தின் மீது ஏறி செல்ல அழைத்து  செல்லவில்லை. ஒட்டக்கத்தின் நிலையை அரசு தரப்பில் ஆராயவும் கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்த கால்நடை மருத்துவர் செல்வமுத்து, தட்ப வெப்பநிலை மாற்றம், மன‌ சோர்வு காரணமாக பராமரிப்பாளரை ஒட்டகம் தாக்கிருக்கலாம். கால்நடைத்துறை மூலம் முகாமை அமைத்து இதுபோன்ற விலங்குகளை அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். இதற்கிடையில் ஒட்டகம் உதைத்து, மிதித்து பின்னர் கடித்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது இந்த ஒட்டகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அது சவாரிக்கு உகந்ததா என்று அரசு ஆராய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.