தாறுமாறாக காரை ஓட்டிய பிளஸ் 2 மாணவன்- ஒருவர் பலி
கோவை பீளமேடு அருகே பிளஸ் 2 மாணவன் ஓட்டிச் சென்ற கார் மோதி சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு அருகே அவிநாசி சாலையில் புதன்கிழமை அதிகாலையில் பிளஸ் டூ மாணவர் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்தார். அப்போது வேகமாக வந்த கார் சென்டர் மீடியனின் சிமென்ட் கற்களில் மோதி தீப்பிடித்து எரிந்தது. பிளஸ் டூ படிக்கும் மாணவன் காருக்குள் மாட்டிக் கொண்ட நிலையில், அவரை கட்டிடத் தொழிலாளர்கள் மீட்டனர். இந்நிலையில் ப்ளஸ் 2 மாணவர் மீதும், காரை ஓட்ட அனுமதித்த அவரது தந்தை மீதும், காரை வைத்திருந்த தாத்தா மீதும் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விபத்தில் இறந்தவர் மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள ஜம்போனி கிராமத்தைச் சேர்ந்த அக்ஷய் வேரா (23) என அடையாளம் காணப்பட்டார்.
இவர் அவிநாசி சாலை உயர்மட்ட தாழ்வாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு (TIW-East) போலிசார் பேசும்போது, சவுரிபாளையம் மகாலட்சுமி கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் மகன் சுஜித் கண்ணா (17). பீளமேடு ஃபன் ரிபப்ளிக் மால் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். புதன்கிழமை அதிகாலையில் பெற்றோர் தூங்கிய பிறகு மைனர் பையன் தனது வீட்டில் இருந்து காரை வெளியே எடுத்துள்ளார். இவர் அவிநாசி சாலையில் செடான் காரை ஓட்டி வந்தார். அவர் கால் டாக்சியை கடக்க முயன்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்த கட்டிடத் தொழிலாளி மீது மோதியது என்று தெரிவித்திருக்கின்றனர். சிட்டி போலிஸ் கமிஷனர் கே. பாலகிருஷ்ணன் பேசும்போது, பீளமேடு பகுதியில் 17 வயது சிறுவன் நான்கு சக்கர வாகனத்தை இயக்கியதில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். அந்த கார் தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதம் அடைந்து விட்டதாகவும சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் பெட்ரோல் மீது வழக்கு பதிவு செய்து கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். 18 பூர்த்தியானாலும் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவிநாசி சாலையில் Speed Camera பொருத்தப்பட்டுள்ளது எனவும் 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் அவர்கள் வாகனத்திற்கு அவதார விதித்தும் பறிமுதல் செய்து வருவதாகவும் தெரிவித்தார். இரவு நேரங்களில் அதிக அளவில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று தெரிவித்திருக்கின.


