அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு

 
இத்தோட நிறுத்திக்கோங்க.. இல்லைனா நாங்களும்.. - ஜெயக்குமாரை எச்சரித்த அமர்பிரசாத் ரெட்டி..

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Image

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் தேவி. தேவியின் தங்கை ஆண்டாள் பாரத ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவியாக பதவி வகித்து வருகின்றார். கடந்த 19-ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை ஒட்டி சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேவியையும், தங்கை ஆண்டாளையும் தாக்க தொடங்கியுள்ளனர். இதில் அவர்கள் படுகாயமடைந்த நிலையில், அமர்பிரசாத் ரெட்டி மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

admk is Extinguished fire amarprasad reddy bjp tamilnadu

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அமர்பிரசாத் ரெட்டி அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் , நிவேதா மற்றும் கஸ்தூரி உள்ளீட்டோர் மீது கோட்டூர் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைந்து தாக்குதல், காயப்படுத்துதல் போன்ற 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.