சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
May 4, 2024, 10:43 IST1714799634361
சவுக்கு சங்கர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும் சமூக வலைதளங்களில் அவர்கள் குடும்பத்தாரின் புகைப்படங்களை பகிர்ந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சவுக்கு சங்கர் தமிழ்நாடு காவல்துறையினரால் தேனியில் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக யூடியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டுள்ளார். பிணையில் வெளி வர முடியாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


