மாடு முட்டி சிறுமி காயம் - உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

 
மாடு முட்டி சிறுமி காயம் - உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு..


சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டி சிறுமி  காயமடைந்த விவகாரத்தில், மாட்டின் உரிமையாளர் மீது  2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் பானு.  இவரது மூத்த மகள் ஆயிஷா.  9 வயதுடைய இவர் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த நிலையில் அவரது தாய் வழக்கம் போல் பள்ளி முடிந்து மகளை வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது,  அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி இளங்கோ தெரு வழியாக நடந்து சென்றுள்ளனர். அப்போது  அவ்வழியாக ஏழு மாடுகள் நடந்து சென்று கொண்டிருந்தன. அதில் ஒரு மாடு திடீரென திரும்பி சிறுமி ஆயிஷாவை கொம்பால் குத்தி தூக்கி வீசியது.

மாடு முட்டி சிறுமி காயம் - உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

இந்நிலையில் சிறுமி தொடர்ந்து அங்கிருந்து எழ முயன்ற நிலையில் மாடு விடாமல் சிறுமியை தொடர்ந்து முட்டி தூக்கி வீசியது.  அப்போது அருகில் இருந்தவர்கள் கற்களை மாடுகள் மீது வீசியும், பிறம்பால் அடித்தும் மாட்டை விரட்ட முயற்சித்தனர்.  ஆனாலும் மாடு சிறுமியை மூட்டி வண்ணமே இருந்தது. பின்னர் ஒரு வழியாக சிறுமையை அவரது தாய் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிறுமிக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்தது. மேலும் சிறுமியின் தாயார் இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் மாட்டின் உரிமையாளர் விவேக்  கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்  அவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் 2 மாடுகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்துச் சென்று தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.