சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!!

 
tn

சமூகநீதியை தமிழக அரசு செயலில் காட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்..

tn

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியுள்ள நிலையில் முன்னதாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.  முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் நடந்த இந்த சந்திப்பில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அவர் மனு அளித்துள்ளார்.

anbumani

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்,  வன்னியர் ஒதுக்கீட்டை சாதி பிரச்சினை அல்ல, அது சமூக நீதி பிரச்சினை. கல்வியில் கடந்த 30 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன. சட்டப்பேரவை கூட்டத்தில் 10.5% இடஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்ற முதல்வரிடம் வலியுறுத்தினோம். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும்.  தமிழ்நாடு அரசு உள் ஒதுக்கீட்டை எப்போது நிறைவேற்றும் என்பது தான் எங்கள் கேள்வி.  வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை ஜாதி பிரச்சினையாக பார்க்க கூடாது என்று தெரிவித்தார்.