விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது கடப்பா கல் விழுந்து பலி
Updated: Jan 27, 2026, 13:58 IST1769502506013
ஆம்பூரில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது கல் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரபீக் நகர் பகுதியை சேர்ந்த வாஹித்.இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று இரவு இவரது 3 வயது மகள் ஹாபியா தஸ்கின் வீட்டின் கேட் அருகே விளையாடி கொண்டிருந்த போது, அங்கு கேட் மீது வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் எதிர்பாராவிதமாக குழந்தை ஹாபியா தஸ்கீன் தலை மீது விழுந்து சிறுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக குழந்தையை அவரது பெற்றோர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


