10 ஆண்டுகளில் நிலவில் நகரம்..! 2 நாளில் பயணம்; 10 ஆண்டில் நகரம் - எலான் மஸ்க் அதிரடி..!
தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது; நிலவில் ஒரு நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரை உருவாக்க 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால், 10 ஆண்டுக்குள் நிலவில் ஒரு நகரத்தை உருவாக்க நம்மால் முடியும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நோக்கம் எப்போதும் மாறாதது.கோள்கள் ஒவ்வொன்றும் 26 மாதங்களுக்கு ஒருமுறை நேர்கோட்டில் வரும்போது மட்டுமே செவ்வாய் கிரகத்திற்குப் பயணம் செய்ய முடியும். அதுவும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல 6 மாத காலமாகும். ஆனால் நிலவுக்கு நாம் ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை விண்கலத்தை ஏவ முடியும். 2 நாளில் சென்று விட முடியும்.
இதன்மூலம், செவ்வாய் கிரகத்தை விட நிலவில் ஒரு நகரத்தை மிக வேகமாக உருவாக்க முடியும். அதே சமயம், 5 முதல் 7 ஆண்டுகளில் ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய் கிரகத்திலும் ஒரு நகரத்தை உருவாக்குவதற்கான பணிகளும் தொடங்கப்படும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


