அலைமோதும் கூட்டம்.. ! 27 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரமாக பயணித்து வருகிறார் விஜய்..!
நாகை பரப்புரையை முடித்துக் கொண்டு திருவாரூர் தெற்கு வீதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசவிருக்கிறார்.
கிட்டத்தட்ட 27 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரமாக பயணித்து வருகிறார் விஜய். அந்த அளவிற்கு மக்களின் பேராதரவுடன் வந்து கொண்டிருக்கிறார். மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்தபடி விஜயின் வாகனம் மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.அந்த அளவிற்கு மக்களின் கூட்டத்தை பார்க்க முடிகிறது.
திருவாரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு கிரைன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகனத்தின் மீது ஏறி அதனை ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்யவுள்ள இடத்திற்கு மீண்டும் புறப்பட்டார். முன்னதாக மேம்பாலம் பகுதியில் த.வெ.க. மன்னார்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
திருவாரூர் தெற்கு வீதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடத்தில் ஆயிரக்கணக்கான தவெகவினர் திரண்டு இருந்த நிலையில், இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக அருகில் இருந்தவர்கள் தூக்கி சென்று முதலுதவி அளித்தனர்.


