நகராமல் அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. மண்டலமாக வலுப்பெற போகுது.. சென்னை மக்கள் உஷார்..!

 
நகராமல் அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. மண்டலமாக வலுப்பெற போகுது.. சென்னை மக்கள் உஷார்..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி  நகராமல் அதே இடத்தில் மையம் கொண்டுள்ள நிலையில்,  அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ( 15 -ஆம் தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம்  அறிவித்திருந்தது, அதன்படி இன்று காலை  தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வரும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

நகராமல் அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. மண்டலமாக வலுப்பெற போகுது.. சென்னை மக்கள் உஷார்..!

அத்துடன்  கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், நாளை  மற்றும் நாளை மறுநாள் ( 16 - 17 ஆம் தேதி) வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும் எனவும், இதனால் வட தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகராமல் அதே இடத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது சென்னை அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால்,  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சென்னையை நோக்கி  மேக கூட்டங்கள் நகர்ந்து வருவதால், மழை மெலும் வலுப்பெறக்கூடுமென கூறப்பட்டுள்ளது..