ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் காவல்துறைக்கு போலி கடிதம்

 
கஜா புயல்: கனடா இசை நிகழ்ச்சி வருவாயை நிவாராணமாக வழங்கும் ஏ.ஆர்.ரகுமான்!

சென்னையில் .ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் காவல்துறைக்கு போலி கடிதம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Image

சமீபத்தில் சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் அவதிப்பட்டதுடன்,  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் பொறுப்பேற்று மன்னிப்பு கோரினார்.  இந்த சூழலில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் சிஇஓ ஹேமந்த் ராஜா,  பார்வையாளர்கள் எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கி இருந்தாலும் அந்த டிக்கெட் தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் காவல்துறைக்கு போலி கடிதம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசாரிடம் 20 ஆயிரம் பேர் கூடுவதற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துவிட்டு  41 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட ஏராளமானோர் கூடியது தொடர்பான பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.