செத்துப்போன மனிதம்! வளர்ப்பு நாயை கடிக்க வைத்து ரசித்த குடும்பம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாயை விட்டு தாய், மகளைக் கடிக்க வைத்ததாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள் ராமலிங்கம், பழனி. இந்த நிலையில் ராமலிங்கத்தின் மகள் பபிதா இந்த மாதம் 13- ஆம் தேதி தனது பெற்றோரைப் பார்த்துவிட்டு கணவன் வீட்டுக்கு திரும்பி தெருவில் செல்லும் போது பக்கத்து வீட்டில் உள்ள பழனி என்பவர் வளர்த்து வரும் நாய் வீட்டிலிருந்து ஓடி வந்து பபிதாவை கடித்து உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாயை விட்டு தாய், மகளைக் கடிக்க வைத்ததாக காவல் துறையில் புகார்#Nagapattinam | #Dog | #Attack | #CCTV | #Police pic.twitter.com/EeTYAkQJkv
— PttvOnlinenews (@PttvNewsX) March 22, 2026

மகளின் சத்தம் கேட்டு பபிதாவின் தாய் மல்லிகாவும் மகளை காப்பாற்ற முயன்ற போது மல்லிகாவையும் கடித்துள்ளது. இதனை பக்கத்தில் வீட்டில் இருந்த பழனி குடும்பத்தார் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். நாய் கடித்ததில் மகள் பபிதாவும், தாய் மல்லிகாவும் பலத்த காயமடைந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.