கடலூரில் அதிவேகமாக பரவும் காய்ச்சல்! மருத்துவமனைக்கு மக்கள் படையெடுப்பு
கடலூர் மாவட்டத்தில் அதிவேகமாக பரவி வரும் காய்ச்சலால் அரசு மருத்துவமனையை நோக்கி மக்கள் படையெடுத்துவருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சலுடன் சளி மற்றும் இருமலும் அதிக அளவில் மக்களுக்கு பரவி வருகிறது. இதன் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையை நோக்கி மக்கள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். இன்று காலை முதல் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அதிக அளவில் மக்கள் காய்ச்சல் மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதே போல் தனியார் மருத்துவமனைகளிலும் அதிக அளவில் மக்கள் காய்ச்சல் மற்றும் இருமல் சளி காரணமாக உடலை காட்டி வருகின்றனர். கடந்த வாரங்களில் அதிக அளவில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டதால் வேகமாக இந்த காய்ச்சல் பரவியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை இரண்டு முதல் மூன்று நாட்கள் இந்த காய்ச்சல் மற்றும் சளி இரும்பலுக்கு மருந்துடன் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்


