முஸ்லிம் பெருமக்களுக்கு இதயமார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துக்கள் - வைகோ..

 
vaiko ttn
உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
உலகம் முழுவதும் நாளை (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உலக முஸ்லிம்களில் பலர் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்றி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறார்கள். திரு குர்ஆனில் ஆறு அத்தியாயங்களில், 32 வசனங்களில், குறிப்பாக 24 தலைப்புகளில் ஹஜ் யாத்திரை பேசப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை
இறைவன் இப்ராஹீம் (அலை) தியாகத்தை ஏற்று இஸ்மாயில் (அலை) அவர்களைப் பலியிடுமாறு கட்டளையிட்டார். (திரு குர் ஆன் 37, வசனம் 100-111)
அவ்வசனங்களுக்கேற்ப உலக முஸ்லிம்கள் கொண்டாடிடும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.