விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ‘மாம்பழம்' சின்னம் கோரி பாமக கடிதம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ‘மாம்பழம்' சின்னம் கோரி பாமக கடிதம்

 
tt tt

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக, தங்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

pmk

தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

bjp pmk

இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பாமக கடிதம் எழுதியுள்ளது.  மக்களவைத் தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்ட பாமக 4.23% வாக்குகளை மட்டுமே பெற்று மாநில கட்சி அந்தஸ்தை இழந்ததால் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.