வேட்டிக்கு நோ என்ட்ரி - விராட் கோலி ஹோட்டலில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

 
tn

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் உணவகத்தில் வேட்டி அணிந்து சென்ற நபருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn

மும்பையில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ஒன் 8 கம்யூன் என்ற பெயரில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.  8500 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.


இந்நிலையில்  மதுரையை சேர்ந்த  தமிழ் ராப் பாடகர் ராம். இவர் சமூகவலைத்தள பக்கத்தில்  ராவண ராம் என்ற பெயரில் வேட்டி சட்டை அணிந்து ராப் பாடல் பாடி வருகிறார்.  இவர்  மும்பையில் வேட்டி அணிந்து விராட் கோலி உணவகத்திற்கு சென்ற நிலையில்  உடையை காரணம் காட்டி உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  உடையை காரணம் காட்டி தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை. விராட் கோலியின் பெயருக்காக தான் இங்கே பலரும் வருகிறார்கள். நான் தங்கியிருந்த ஹோட்டலில் கூட சாப்பிடாமல் இங்கு சாப்பிட வந்தேன்.  இது போன்று நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். பசியில் இங்கு சாப்பிட வந்தபோது உள்ளே அனுமதிக்காதது வருத்தமாக உள்ளது  என்று தெரிவித்துள்ளார்.