பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் போக்சோவில் கைது

 
கைது

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

arrest

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி அளித்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நாகராஜ் (20) கைது செய்து சிறையில் அடைத்தனர்.