தேசியக்கொடியுடன் கோவில் கோபுரத்தின் மீது ஏறி போராடியவர் கீழே விழுந்து பலி

 
ப் ப்

விராலிமலை முருகன் கோவில் கோபுரத்தின் மீது ஏறி போராடியவர் கீழே விழுந்து பலியானார். 

விராலிமலை முருகன் கோவில் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவர் கீழே விழுந்து உயிரிழந்தார். விராலிமலை கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆறுமுகம் தேசியக்கொடியுடன் கோபுரத்தின் மீது ஏறி போராடினார். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் ஆறுமுகம் கீழே இறங்க முயன்றுள்ளார். கோபுரத்தின் மீது உள்ள சுவாமி சிலை சிற்பங்களை பிடித்து ஆறுமுகம் கீழே இறங்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது கை வழுக்கியதால் திடீரென கீழே விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் பலியானார். சமூக ஆர்வலரான ஆறுமுகம் இறப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.