மாடுகளை குளிக்கவைத்துக் கொண்டிருந்தவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு

 
வெள்ளம்

குமரி மாவட்டம் வீரவ நல்லூர் பகுதியில் ஆற்றில் மாடுகாளை சுத்தம் செய்து கொண்டு இருந்தவரை நேற்று திடிரென வந்த காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது. மாயமானவரை நாகர்கோயில் தீயணைப்பு துறையினர் தேடி வந்த நிலையில் இருபது மணி நேரத்திற்கு பிறகு இன்று  சடலமாக மீட்கப்பட்டார்.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் விட்டு விட்டு மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டம் காளிகேசம், கீரிப்பாறை பகுதிகளில் திடிர் திடீரென காட்டாற்று வெள்ளம் வருகிறது. இந்நிலையில் நேற்று ஞாலம் அருகே வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் தனது  மாடுகளை அருகில் உள்ள  ஆற்றில் சுத்தம் செய்து கரையேற்றி விட்டு தான் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார். அப்பொழுது திடீரென ஆற்றில் காட்டாற்று  வெள்ளம் வந்தது.

இந்த காட்டாற்று வெள்ளமானது ஆற்றில் இறங்கி இருந்த  மணிகண்டனை இழுத்து சென்றது.காட்டாற்று வெள்ளத்தில் மாயமானது தொடர்பாக அப்பகுதி மக்கள் நாகர்கோயில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட  மணிகண்டனை தேடும் பணியில்  தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இதனிடையே  இரவு நேரம் என்பதால் தீயணைப்பு துறையினர்  தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும்  தீயணைப்பு துறை வீரர்கள் தங்கள் தேடுதல் பணியை தொடர்ந்த நிலையில் இருபது மணி நேர தேடுதலுக்கு பிறகு காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டவர் அப்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.