விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடக்கும் தவெக பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு இன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். அவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ ஆர் கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர். ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் துப்பாக்கி இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. அப்போது அவர் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதை காட்டினார். தான் சிவகங்கை மாவட்ட செயலாளர் பிரபுவின் தனி பாதுகாவலர் டேவிட் என தெரிவித்தார்.
ஆனாலும் போலீசார் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக்கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். அவரை விசாரணைக்காக ஓதியஞ்சாலை போலீஸ்ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.


