நெருங்கும் தேர்தல் முடிவுகள் - திமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 
arivalayam arivalayam

ஜூன் 1ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.

duraimurugan

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "கழக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, ஜூன் 4-ம் தேதி அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள்-கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் வருகிற 1-6-2024 காலை 11 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

duraimurugan

இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.