வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - புயலாக மாறுமா?

 
rain rain

ஆந்திரா - ஒடிசா கடற்கரையிலிருந்து வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

TN Weather Update : வங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. இனி தமிழ்நாட்டுக்கு மழை எப்படி இருக்கும்?


வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையிலிருந்து வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. ஆக.19 அன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரப் பிரதேச பகுதியில் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.