அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

 
rain

அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், வரும் 26ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் கூறியுள்ளது.

Rain

இந்த சூழலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழ்நாடு முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது; வரும் 26-ம் தேதி அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.