முதல் உயிர்பலி! தவெக மாநாட்டிற்கு சென்றவருக்கு மாரடைப்பு

 
ச்ந் ச்ந்

தவெக மாநாட்டிற்காக நாகையில் இருந்து மதுரை வந்த தொண்டருக்கு திடீரென மாரடைப்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Image

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிதாக அரசியல் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து களப்பணி ஆற்றி வருகிறது. அந்தவகையில் தென்மாவட்டங்களை மையப்படுத்தி அக்கட்சியின் 2வது மாநில மாநாடு இன்று மதுரையில் தொடங்கியுள்ளது. த.வெ.க தொண்டர்கள் அதிக அளவில் கூடியுள்ள நிலையில், மங்கல இசையுடன் மாநாடு தொடங்கப்பட்டுள்ளது.

Image

இந்நிலையில் தவெக மதுரை மாநாட்டிற்காக சென்னையில் இருந்து சென்ற பிரபாகரன் என்பவருக்கு சத்தியமங்கலம் அருகே மாரடைப்பு ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவர் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் தவெக மாநாட்டிற்காக நாகையில் இருந்து மதுரை வந்த தொண்டருக்கு திடீரென மாரடைப்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.