சென்னை தலைமை செயலகம் அருகே தனியார் நிறுவன பேருந்து விபத்து!

 
accident accident

சென்னை தலைமை செயலகம் அருகே தனியார் நிறுவன பேருந்து ஒன்று சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குளானது. 

சென்னை வேளச்சேரியில் இருந்து எண்ணூரில் செயல்பட்டு வரும் தனையார் நிறுவனத்திற்கு வழக்கம் போல் பேருந்து ஒன்று ஊழியர்களை ஏற்றிச் சென்றது. இந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் 13 தனியார் நிறுவன ஊழியர்கள் பயணம் செய்தனர். இந்த பேருந்து சென்னை தலைமை செயலகம் அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர தடுப்பில் மோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், தனியார் நிறுவன ஊழியர்கள் 13 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். 

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாலையோர தடுப்பில் மோதி நின்ற பேருந்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் பேருந்தை பறிமுதல் செய்து விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமை செயலகம் அருகே தனியார் நிறுவன பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.