பிரதமர் மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற ஸ்டாலினால் மட்டுமே முடியும்- ஆ.ராசா

 
a

பிரதமர் மோடியிடம் இருந்து இந்தியாவையும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளதாக திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார். 

a

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா சிலை அருகே இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. ஸ்ரீதரன்உள்ளிட்ட  கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய ஆ.ராசா, “தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற போது தமிழகத்தில் கொரோனா தொற்று கடுமையாக இருந்தது. இந்தியாவிலேயே பிணத்தை எரிக்க கூட ஆள் இல்லாத நிலையில் இருந்த பொழுது கூட இந்தியாவின் பிரதமர் மோடி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்யாத நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா உடை அணிந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அடுத்த கட்ட சோதனையாக பெரும் மழை காலங்களில் தண்ணீரில் நீந்திக் கொண்டு சென்று அதிகாரிகளுக்கு 24 மணி நேரமும் கண்காணித்து உத்தரவிட்டு மழை வெள்ளத்தை வடிய செய்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்து தமிழகத்தை விட்டு சென்ற நிலையில் 6 லட்சம் கோடி தமிழக அரசு கடனில் தத்தளித்தது. அப்பொழுது தமிழக முதல்வர் கடந்த எடப்பாடி தமிழகத்தை கஜானாவை காலி செய்ததை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக ஊதாரி தனமாக செலவு செய்ததை வெளிக்காட்டுவதற்காக வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

You are a Shudra till you remain a Hindu': DMK leader A Raja quotes  Manusmrithi, draws BJP's ire | Cities News,The Indian Express

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்த மாணவர்களின் படிப்பு செலவை தமிழக அரசு ஏற்று மூன்று லட்சம் முதல் 5 லட்சம் வரை வைப்புத் தொகையாக செலுத்த உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்ற திட்டத்தை நிறைவேற்றியதன் மூலமாக ஆபத்து காலத்தில் உதவுவதற்கு கூட கடவுள் இல்லாத நிலையில் தமிழக முதல்வர் கடவுளாக வருவார் என்பதை இந்த திட்டத்தின் மூலம் நிறைவேற்றி நிரூபித்துள்ளார். 

அண்ணா பெரியார் கலைஞர் ஆகியோர் இருந்த பொழுது மதம் உச்சத்தில் இல்லை. ஆனால் இன்று மதத்தால் உச்சகட்ட ஆபத்து உள்ளது. ஆபத்தை எதிர்த்து நிற்க இந்தியாவில் மோடியை எதிர்க்க எந்த தலைவர்களும் துணிவு இல்லை, மோடியையும் காவியையும் எதிர்த்துப் பேச தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை தவிர வேறு யாரும் இல்லை. மோடி ஆட்சியில் நீதித்துறையில் காவி புகுந்துள்ளது. அண்ணா காலத்திலும் பெரியார் காலத்திலும் ஆர்எஸ்எஸ், பிஜேபி இல்லை. கலைஞர் காலத்தில் ஆர்எஸ்எஸ், பிஜேபி அவரின் கட்டுப்பாட்டில் இருந்த