ரயில் நிலையத்தில் இளைஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி- விழுப்புரத்தில் பரபரப்பு

 
ரயில் நிலையத்தில் இளைஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி- விழுப்புரத்தில் பரபரப்பு ரயில் நிலையத்தில் இளைஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி- விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கம் ரயிலடி வாயிலில் உறங்கி கொண்டிருந்த இளைஞர் மீது ரவுடி ஒருவர் வம்பிழுத்து நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bomb_blastvpm

விழுப்புரம் அருகேயுள்ள கண்டாம்பாக்கத்தை சார்ந்த நாராயணசாமி என்பவர் மீது செல்போது திருட்டு வழக்கு உள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்களிடம் சண்டையிடுவது கையில் கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நாராயணசாமியால் 5 பேர் பாதிக்கப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அவர்களை மிரட்டி வழக்குகளை வாபஸ் செய்ய செய்துள்ளாத். கண்டம்பாக்கத்தில் ரவுடீசம் செய்து வரும்  நாராயனசாமியுடன் அப்பகுதி மக்கள் பேச்சுவார்த்தை வைத்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் போதை அருந்திய நாராயணசாமி கண்டம்பாக்கம் ரயிலடியில் நான்கிற்கும் மேற்பட்டோர் படுத்திருந்துள்ளனர். அப்போது அங்குவந்த நாராயணசாமி ரயிலடியில் படுத்திருந்தவர்களிடம்  வாக்கு வாதம் செய்துள்ளார். அப்போது இந்த ஊரில் என் மீதிருந்த பயம் எல்லோரிடத்திலும் போய்விட்டதா என கூறி ரயிலடியில் படுத்திருந்தவர்கள் பகுதியில் நாட்டு வெடிகுண்டுவை வீசியுள்ளார். இதில் அங்கு படுத்திருந்த அப்பு என்கிற பரணிதரன் என்பவர் முகத்தில் பாடுகாயம் அடையவே அங்கிருந்தவர்கள் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் பரணிதரனை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து சம்பவ இடத்தில் விசாரனை செய்தனர். மேலும் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசிவிட்டு தலைமறைவாகிய நாராயணசாமி மற்றும் அவனுடன் வந்த சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். கண்டம்பாக்கம் ரயிலடியில் நாட்டு வெடி குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.