பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

 
mkstalin mkstalin

 பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான் என , சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை  எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அந்த  சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு  சிறப்புரையற்றினார்.  அவர் பேசியதாவது., “உலகத்தில் எந்நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். மகளிர் தினம் மனிதகுலத்துக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள்.

We the Women

மகளிரை வாழ்த்துவதன் மூலம் இந்த நாட்டை வாழ்த்துகிறோம். மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது. இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்பால் பெண்கள் முடக்கப்பட்டார்கள். முடக்கப்பட்ட பெண்களை மீட்க தொடங்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர்கள் பெண்கள் தான். இலவச பேருந்து சலுகை என்பது மகளிருக்கான உரிமை. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.” என்று  தெரிவித்தார்.