விஜய் கூட்டம்- புதுவையில் ஒரு பள்ளிக்கு நாளை விடுமுறை
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ள நிலையில், ஒரு பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த தவெகவினர் முதல்வர் ரங்கசாமி, டிஜிபி அலுவலகத்தில் மனு தந்தனர். பலமுறை புஸ்ஸி ஆனந்த் வந்து முயற்சித்தும் அதற்கு அனுமதி தரவில்லை. இச்சூழலில் உப்பளத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக பொதுக்கூட்டத்துக்கு அக்கட்சி நிர்வாகிகள் கோரியப்படி 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். தவெக கட்சி தரப்பில் தரப்படும் க்யூ ஆர் கோடு கொண்ட நுழைவுச்சீட்டு வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். க்யூஆர் கோடு நுழைவுசீட்டு இல்லாதோருக்கு அனுமதியில்லை என்பதால் பொதுமக்கள் அரங்குக்கு வரவேண்டாம். அது சிரமத்தை ஏற்படுத்தும். முக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் நிகழ்வில் பங்கேற்க அனுமதி இல்லை. புதுச்சேரியில் வசிப்போருக்கு மட்டுமே க்யூஆர் கோடு நுழைவு சீட்டு வசிப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். புதுச்சேரி அருகேயுள்ள தமிழக மாவட்டங்களில் வசிப்போர் உப்பளம் மைதானத்துக்குள் நுழைய அனுமதியில்லை. வாகனங்களை நிறுத்த பாண்டி மெரினா, ஸ்டேடிய பின்புறம், பழைய துறைமுகப்பகுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ள நிலையில், ஒரு பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் சந்திப்பு நடக்கும் உப்பளம் மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


