லிவிங் டு கெதரில் காதலனுடன் வாழ்ந்துவந்த சென்னை பெண் மர்ம மரணத்தில் திடுக் திருப்பம்
லிவிங் டு கெதரில் காதலனுடன் வாழ்ந்துவந்த சென்னை பெண் மர்ம மரணத்தில் வெளியான திடுக் திருப்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவெற்றியூரை சேர்ந்தவர் பாஸ்கர் (58). இவருக்கு திருமணமாகி வரலட்சுமி (46) என்ற மனைவியும், நித்யா (26) என்ற மகள் மற்றும் தமிழ்செல்வன் (25) என்ற மகனும் உள்ளனர். இதில் நித்யா, அம்பத்தூரில் உள்ள ஐடி கம்பெனியில் கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்து வருகிறார். நித்தியா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடந்த 8 மாதங்களாக வீட்டில் இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் அரை எடுத்து தங்குகிறேன் எனக் கூறி தனியாக தங்க ஆரம்பித்துள்ளார். அதன்பிறகு இவருக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வரும் கொடுங்கையூரை சேர்ந்த பாலமுருகன் (28) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த எட்டு மாதங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதமாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி ஏழாவது தெருவில் வீடு எடுத்து லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு நித்தியா எனது பெற்றோர்கள் வீட்டிற்கு வருகிறார்கள், அதனால் நீ வீட்டில் இருக்க வேண்டாம் எனக் கூறி பாலமுருகனை வெளியே அனுப்பி வைத்துள்ளார். நேற்று மாலை 5 மணியளவில் பாலமுருகன் மீண்டும் வீட்டிற்கு வரும்போது வீட் டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது பெயர் தெரியாத நிறைய மாத்திரைகளை உட்கொண்டு நித்யா இறந்து கிடந்தார். மேலும் நித்தியாவிடம் இருந்த 25 சவரன் நகைகள் காணவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக லிவிங் டு கெதரில் காதலனுடன் வாழ்ந்துவந்த சென்னை பெண் மர்ம மரணத்தில் திடுக் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர் சந்தோஷ்குமார் என்பவர் போதையில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்து, 25 சவரன் நகைகளை எடுத்து சென்றது அம்பலமாகியுள்ளது. கொலையான இப்பெண், வீடியோ கால் மூலம் பேசி பலரை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்துள்ளதாகவும் மருத்துவர் உள்ளிட்ட பலரை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐடியில் வேலை பார்ப்பதாக பெற்றோரை ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


