#BIGNEWS வானிலை அலார்ட்! வங்கக்கடலில் நவ.26ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு
Nov 23, 2025, 12:18 IST1763880513575
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.

மலாக்கா ஜலசந்தி, அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில், அதாவது நவ.26ம் தேதி புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அவ்வாறு மாறும் பட்சத்தில் `சென்யார்’ என பெயரிடப்படும். `சென்யார்’ என்றால் அரபு மொழியில் `சிங்கம்’ என என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


