இரவு முழுவதும் கண் விழித்து படித்த மாணவர் மாரடைப்பால் மரணம்..?
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படிக்கும் சக்தி என்ற மாணவர், கல்லூரி விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி. இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்துவந்தார். இந்நிலையில் இன்று காலை சக்தி, கல்லூரி விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் கல்லூரி விடுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி விடுதியில் உள்ள அறையில் நள்ளிரவு படித்துவிட்டு உறங்கிய மாணவர்ாலையில் அறையை திறக்காததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள், அறையை உடைத்து பார்த்தபோது படுத்த படுக்கையிலேயே மாணவர் உயிர் பிரிந்தது தெரியவந்தது. இதனிடையே மாணவர் சக்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் மாணவர் சக்தியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.