குன்னூர் அருகே 200 அடி பள்ளத்தில் விழுந்த தவெகவினர் சென்ற வாகனம்; 21 பேர் காயம்..!
வருகிற சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்டம், குன்னூர் தொகுதியில் தவெக சார்பில் தங்கராஜ் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக ராசிபுரத்தில் இருந்து குன்னூருக்கு தவெக தொண்டர்கள் மினி பேருந்தில் புறப்பட்டனர்.
சாலையில் செல்லும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த 200 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 21 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து காயமடைந்தவர்கள் அனைவரும் குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தேர்தல் பிரச்சாரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. விபத்துகுறித்து கொளக்கம்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

