மது ஒழிப்பு மாநாட்டில் பெண் ஆய்வாளரை கைவைத்து தள்ளிய விசிகவினர்
மது ஒழிப்பு மாநாட்டில் பெண் ஆய்வாளரை கைவைத்து தள்ளிய வி.சி.க-வினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து மகளிர் மற்றும் விசிக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விசிகவின் மாநாட்டில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர். மகளிரை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரெளடிகளின் கூடாரமா விடுதலை சிறுத்தைகள் கட்சி?
— Dr.SG Suryah (@SuryahSG) October 2, 2024
நடந்தது அரசியல் கட்சி மாநாடா? அல்லது வேறு எதுவுமா?
வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டில் பெண் ஆய்வாளரை கைவைத்து தள்ளிய வி.சி.க-வினரை வன்மையாக கண்டிக்கிறோம்.
பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத மாநாட்டை நடத்திவிட்டு ஏதோ சாதித்துவிட்டதுபோல்… pic.twitter.com/E48ct72Kcu
இந்நிலையில் மது ஒழிப்பு மாநாட்டில் பெண் ஆய்வாளரை கைவைத்து தள்ளிய வி.சி.க-வினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத மாநாட்டை நடத்திவிட்டு ஏதோ சாதித்துவிட்டதுபோல் பேசும் திருமாவளவனுக்கு வன்மையான கண்டனங்கள், ரெளடிகளின் கூடாரமா விடுதலை சிறுத்தைகள் கட்சி? இது நடந்தது அரசியல் கட்சி மாநாடா? அல்லது வேறு எதுவுமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்