“Cm சார் நீங்க தான் கெத்து... TVK எல்லாம் வெத்து”- ஸ்டாலினிடம் சிறுமி சேட்டை
கொடைக்கானலில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து “Cm சார் நீங்க தான் கெத்து... TVK எல்லாம் வெத்து” என சிறுமி ஒருவர் உற்சாகமாக சொன்னார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் கொடைக்கானலுக்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் குடும்பத்தினருடன் வருகை புரிந்தார். தொடர்ந்து முதலமைச்சர் தினமும் காலை நடைபெற்றது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுடன் செல்பிகள் எடுத்து புகைப்படம் எடுத்து வந்த நிலையில், இன்று மீண்டும் சென்னை திரும்புகிறார். இதற்காக தனியார் நட்சத்திர தங்கும் விடுதியில் இருந்து தற்போது கிளம்பி உள்ள முதலமைச்சர் விடுதிக்கு வெளியே காத்திருந்த பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் கட்சியினர் கூடியிருந்த இடத்தில் திடீரென்று அவரது காரில் இருந்து இறங்கினார். இறங்கியவுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுத்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து வளரும் வரவேற்றனர்.
இந்நிலையில் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமி திடீரென்று பூங்கத்தை கொடுத்து, “cm சார் நீங்க தான் கெத்து TVK எல்லாம் வெத்து” என்று கூறியவுடன் பூங்கத்துக் கொடுத்து வாழ்த்தினார். அப்போது முதலமைச்சர் சிறுமியை புன்னகைத்து பார்த்து கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் காத்திருந்த பொதுமக்களிடம் நன்றி கூறி சென்னை திரும்பினார்.

