இறந்தும் வாழும் இளைஞர்.. மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்..

 
இறந்தும் வாழும் இளைஞர்.. மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்..  இறந்தும் வாழும் இளைஞர்.. மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்.. 


கோவையில் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இறந்தும் வாழும் இளைஞரின் உடல் அரசு மரியாதைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கோவை காளம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ஸ்ரீராம் (22). இவர் கடந்த 3-தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளை சாவு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீராமின் உடல் உறுப்புகள் தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்தனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி சிறுநீரகம், கல்லீரல்,  கணையம், கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது. 

லாரி மீது  பேருந்து மோதி விபத்து

இவற்றில் கணையம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும்,  கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும்,  ஒரு சிறுநீரகம், கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும்,  ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.  இறந்தௌம் 4 பேரின் உயிரைக் காப்பாற்றிய  ஸ்ரீராமின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.  பின்னர் ஸ்ரீராமின் உடல் அவரது குடும்பத்தினரிடம்  ஒப்படைக்கப்பட்டது.