பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை
அரசுப் பேருந்தில் பயணித்த இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் ஜியபுரம் கொடியாலம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு(20). இவர் இன்று காலை சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்காக கொடியாலத்தில் அரசு பேருந்தில் பின்பக்கம் ஏறி படிக்கட்டில் நின்று சென்று கொண்டிருந்தார்.கொடியாலம் அடுத்த திண்டுக்கரை ரயில்வேகேட் அருகே ஹெல்மெட் அணிந்தும்முகத்தில் துணியை கட்டிக் கொண்டும் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வந்தது. அதில் ஒருவர் பேருந்தில் ஏரி விஷ்ணுவை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டார். தொடர்ந்து அந்த கும்பல் விஷ்ணுவின் முகம், தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.அதில் சம்பவ இடத்திலேயே விஷ்ணு உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜியபுரம் போலீசார் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களும் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக கொடியாலம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கொலைக்கும் விஷ்ணுவிற்கும் சம்மதம் உள்ளது என அவர் கைது செய்யப்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்த விஷ்ணுவை - பழிக்கு பழி வாங்க தற்போது படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விஷ்ணு மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் கோகுல் கொலை வழக்கு தொடர்பாக பழிக்குப் பழி வாங்க விஷ்ணு படுகொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது விஷ்ணுவின் கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.