தவெகவிற்கு 20% வாக்குகள் உறுதி- ஆதவ் அர்ஜூனா

 
ச் ச்

அண்ணன் செங்கோட்டையன் அவரது வாழக்கையில் பெரிய முடிவுகளை எடுத்திருக்கிறார் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “வரலாறு திரும்புகிறது.. புதிய வரலாற்றை உருவாக்க செங்கோட்டையன் வந்துள்ளார். தவெகவிற்கு ஏற்கனவே 20சதவீத வாக்குகள் உறுதி. செங்கோட்டையன் அனுபவம் வெற்றிக்கு வழிவகுக்கும். 2026 சட்ட மன்ற தேர்தலில் த.வெ.கவுக்கு 28% ஓட்டு உறுதியாகிவிட்டது. இன்னும் 10% தான் நாம் சேர்க்க வேண்டும். இளைஞர்கள் இருக்கிறார்கள். புது பயணத்தை உருவாக்குவோம் என்று செங்கோட்டையன் அண்ணன் என்னிடம் கூறினார். தமிழகத்தின் ஊழலில்லாத , நேர்மையான புதிய நிர்வாகத்தை உருவாக்க எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதல்வராக்க உதவியதுபோல விஜய்க்கும் துணை நிற்பார் செங்கோட்டையன். தேசிய கட்சிகள் தொடங்கி ஆளுங்கட்சி வரை செங்கோட்டையனை இழுக்க முயற்சி செய்தார்கள்.” என்றார்.