காங்கிரசுடன் ஒருமுறை கூட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை- ஆதவ் அர்ஜூனா
தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சூறாவளி பிரச்சாரம் தமிழக அரசியல் வரலாற்றை மாற்றும் என தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்லார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாற்றிய தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை காத்திருந்து பாருங்கள், தவெகவிற்கு வெற்றி நிச்சயம். கடந்த 20 ஆண்டுகளாக மக்களுடன் இணைந்துள்ள விஜய்யை மக்களே தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை ஒருமுறை கூட தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என தவெக கூறியதால்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி ஏற்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சூறாவளி பிரச்சாரம் தமிழக அரசியல் வரலாற்றை மாற்றும். சினிமாவில் சம்பாதித்த பணத்தை 1 பைசா கூட விஜய் கட்சிக்காக செலவு செய்வதில்லை. விஜய் வடசென்னையில் போட்டியிட வாய்ப்புள்ளது. 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர்” என்றார்.

