"முதல்ல கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுங்க... அறிவாலயம் கேட்க்கு வெளியே நிற்க வைக்காதீங்க”- ஆதவ் அர்ஜூனா

 
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா

திமுக தனியா எந்த கூட்டணியும் இல்லாம, அதிமுக தனியா கூட்டணி இல்லாம, அதே மாதிரி தவெக கூட்டணி இல்லாம பார்த்தோம்னா மக்களோட சப்போர்ட் தவெகக்கு சுமார் 27% க்கு மேல அதிகமா இருக்கு என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜூனா

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “அரசியல் சூழல் 2016-க்கு அப்புறமும் 2021-க்கு அப்புறமும் மாறியிருக்கு. முக்கியமா, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கட்சியை ஆரம்பிச்ச பிறகு இப்போ இருக்கிற அரசியல் சூழல். ஜெயலலிதா அம்மா இருந்த வரைக்கும், கலைஞர் கருணாநிதி அவர்கள் இருந்த வரைக்கும், ரெண்டு கட்சிகளும் சேர்ந்து சுமார் 70-75% ஓட்டு வங்கியை ஹோல்ட் பண்ணிட்டு இருந்தாங்க. ஜெயலலிதா அம்மா 2016-ல 41% ஓட்டு பெற்று மக்களோட செல்வாக்கை எடுத்தாங்க.ஆனா, ரெண்டு பேரோட மிகப்பெரிய இழப்புக்கு அப்புறம், மிகப்பெரிய ஆளுமைகளும் தலைமைகளும் இல்லாத நேரத்துல, தமிழக வெற்றிக் கழகத்தோட இன்னைக்கு மக்களோட செல்வாக்கு உறுதியா சொல்றோம். திமுக தனியா எந்த கூட்டணியும் இல்லாம, அதிமுக தனியா கூட்டணி இல்லாம, அதே மாதிரி தவெக கூட்டணி இல்லாம பார்த்தோம்னா மக்களோட சப்போர்ட் தவெகக்கு சுமார் 27% க்கு மேல அதிகமா இருக்கு. இந்த கால்குலேஷன் எல்லாம் தேசிய கட்சிகளுக்கு, காங்கிரஸுக்கும், பிஜேபிக்கும் எல்லாருக்கும் தெரியும். அதுல குறிப்பா, 2024-லகால்குலேஷன் பார்த்தா தெரியும். ஆதிமுக கூட்டணி இல்லாம நின்னாங்க. கூட்டணி இல்லாம நின்னப்போ 20%-க்கு மேல தான். 

கூட்டணி இல்லாம மிகப்பெரிய ஆளுமை இல்லாத நேரத்துல (அம்மா இல்லாத நேரத்துல) 40%-ல இருந்து 20% ஆயிடுச்சு.இதுதான் நிதர்சன உண்மை. அதே மாதிரி திமுகவுக்கும் கூட்டணி கட்சிகள் காங்கிரஸோ, விசிக-யோ, கம்யூனிஸ்ட் காரங்களோ, முஸ்லிம் லீக் கட்சிகளோ இல்லாம அவங்களோட உண்மையான ஓட்டு வங்கி 22%-க்கு மேல கிடையாது. தவெக இன்னைக்கு குறைந்தபட்சம் 27% கிராஸ் பண்ணிருக்கு தனியா.இந்த உண்மைகள் முதலமைச்சருக்கு தெரியும், அவங்களுக்கும் டேட்டா தெரியும். அவங்களோட நிறுவனங்களும் ஒரு டேட்டா கொடுத்திருப்பாங்க. அவர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு ஏன் இல்லைன்னு சொல்றார்னா... இப்போ அவங்க அடிக்கிற கொள்ளைகள், ஊழல்கள். ஒரு அமைச்சரவையில காங்கிரஸ்காரங்களோ, காங்கிரஸ் அமைச்சர்களோ இல்ல, விசிகே அமைச்சர்களோ, கம்யூனிஸ்ட் அமைச்சர்களோ இருந்தாங்கன்னா, அவங்க செய்யக்கூடிய ஊழல்களை வேற கட்சியில இருந்தா கேள்வி கேப்பாங்க. அதனால ஆட்சியில பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராதுன்னு நினைக்கிறார்

Advertisement

எங்களால் வந்து 234 தொகுதிகளிலும் தனியாக நின்று நாங்கள் வெற்றி பெற முடியும்,எங்க தலைவர் சொல்ற மாதிரி, முடிந்தால் தைரியம் இருந்தால்...முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், 2014-ல அம்மா சொன்ன மாதிரி, "நாங்க தனியா 234 தொகுதிகளிலும் உதயசூரியனை நிறுத்தி ஜெயிச்சு காட்டுவோம் "னு தைரியம் இருந்தா, ஒரு மேடையில இருந்து சொல்லச் சொல்லுங்க! அப்போ அவங்களுக்கு ஆதரவு இருக்கா இல்லையான்னு தமிழக மக்களுக்கு தெரியும். திமுகவுக்கு ஆதரவு பலம் இழந்துவிட்டது. 22% மேல வோட் பேங்க் கிடையாது. அதனாலதான் காங்கிரஸ்ல இருக்கக்கூடிய தலைவர்கள் 50 வருஷம் கழிச்சு எங்களுக்கு ஆட்சியில பங்கு வேணும், அமைச்சரவையில பங்கு வேணும்னு கேட்கிறாங்க. காங்கிரஸ்ல எவ்வளவு முரண்பாடுகள் இருக்கு பாருங்க! செல்வப்பெருந்தகை ஒண்ணு சொல்றாரு, மாணிக்கம் தாகூர் சார் ஒண்ணு சொல்றாரு, அங்க இருக்க கிரீஷ் சார் ஒண்ணு சொல்றாரு. நாங்க எல்லாம் ரொம்ப வருத்தத்துல இருக்கோம்...  "We are very sad"னு சொல்றாரு.ராகுல் காந்தி ஐயா மீட்டிங் முடிஞ்ச உடனே இன்சார்ஜ் வந்து சொல்றாரு. இதுல இருந்தே தெரியுது இந்த கூட்டணி எந்த அளவுக்கு  FIT ஆகல. எந்த அளவுக்கு திமுக இன்னைக்கு மக்கள்ட்ட வலுவிழந்ததுனால தான் இவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்திருக்கு. முதல்ல கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுங்க... அறிவாலயம் கேட்-க்கு வெளியே நிற்க வைக்காம, அவங்கள அழைச்சு அறிவாலயத்துக்குள்ள கூட்டிட்டு போய், சரிசமமா உட்கார வச்சு பேசுங்க!” என்றார்.